4.3 C
New York
Friday, March 20, 2026

இலங்கையில் இன்று முதல் புதன்தோறும் விசேட விடுமுறை- நெருக்கடியை சமாளிக்க திட்டம்.

எரிபொருள் நெருக்கடியைச் சமாளிக்கும் வகையில் இலங்கையில் இன்று முதல் புதன்கிழமை தோறும் விசேட விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

மறு அறிவித்தல் வரும் வரை இந்த விடுமுறை தற்காலிகமாக நடைமுறையில் இருக்கும்.

வங்கிகள், சுகாதாரம், போக்குவரத்து உள்ளிட்ட அத்தியாவசிய சேவைகள் தவிர ஏனைய அரச ஊழியர்களுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

இதையடுத்து அரச செயலகங்கள், பாடசாலைகள், உயர்கல்வி நிறுவனங்கள், நீதிமன்றங்களுக்கு இன்று மூடப்பட்டுள்ளன.

தனியார் கல்வி நிறுவனங்களும் இதனைப் பின்பற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ரயில், பஸ் போக்குவரத்துகளும் மட்டுப்படுத்தப்பட்டுள்ளன.

எரிபொருள் நெருக்கடியை சமாளிக்கும் வகையில், கியூஆர் குறியீட்டு முறையில் எரிபொருள் விநியோகம் இடம்பெறும் நிலையில் அடுத்த நடவடிக்கையாக வார வேலை நாட்கள் 4 ஆக குறைக்கப்பட்டுள்ளது.

Related Articles

Latest Articles