14.6 C
New York
Sunday, September 27, 2026

கத்திக்குத்தில் ஒருவர் பலி.

துர்காவ், சுல்கனில் நேற்று மதியம் 2:15 மணிக்கு காவல்துறைக்கு அழைப்பு எடுத்த 65 வயதுடைய நபர் ஒருவர் ஒரு நபர் தன்னை கத்தியால் குத்தியதாக தெரிவித்தார்.

பலத்த வெட்டுக் காயங்களுக்குள்ளான அவர், உடனடியாக மருத்துவ சிகிச்சை அளித்தும் பலனின்றி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

- Advertisement -

அதிகாரிகள் தாக்குதல் நடத்திய நபரை கைது செய்தனர். கைது செய்வதை அவர் எதிர்க்கவில்லை.

முதற்கட்ட விசாரணையின்படி, சொத்து தொடர்பாக இருவருக்குமிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டவரின் அடையாளம் இன்னும் முழுமையாக நிறுவப்படவில்லை.

சந்தேகத்திற்கிடமான கொலை ஆயுதமும் மீட்கப்பட்டது. சுவிஸ் சந்தேக நபர் கைது செய்யப்பட்டார்.

மூலம்- bluewin

Related Articles

Latest Articles