பெர்னில் க்னீ சர்க்கஸின் நிகழ்ச்சியின் போது மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் ஒருவர் காயமடைந்தார். ஞாயிற்றுக்கிழமை இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, மற்ற பல கலைஞர்களுக்கும் மருத்துவப் பரிசோதனைகள் செய்யப்பட்டன. அனைவரும் ஞாயிற்றுக்கிழமை மாலை மருத்துவமனையிலிருந்து வெளியேறினர்.
“ஓட்டுநர்களில் ஒருவர் நிர்ணயிக்கப்பட்ட பாதையிலிருந்து விலகிச் சென்றபோது விபத்து ஏற்பட்டது,” என்று சர்க்கஸின் செய்தித் தொடர்பாளர் லிவியா லோங்கோ, கூறினார். இந்த விபத்து “குளோப் ஒவ் ஸ்பீட்” என்ற இடத்தில் நடந்தது.
இந்த நிகழ்ச்சியில், பல மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்கள் ஒரு உலோகக் கோளத்திற்குள் சாகசங்களைச் செய்கிறார்கள். நிகழ்ச்சியின் முடிவில், எட்டு மோட்டார் சைக்கிள்கள் கோளத்திற்குள் இருந்தபோது இது நடந்தது. அவை அனைத்தும் ஒன்றன் மீது ஒன்றாகக் குவிந்தன.
ஒரு கணம் கவனக்குறைவாக இருந்ததால் தவறு நடந்ததாக லிவியா லோங்கோ மேலும் கூறினார். தென் அமெரிக்க மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்கள் யாருக்கும் பலத்த காயம் ஏற்படவில்லை. தற்போதைய சூழ்நிலைகளைக் கருத்தில் கொண்டு, அனைவரும் நலமாக உள்ளனர். ஓட்டுநர்களில் ஒருவர் சிறு காயங்களுக்கு சிகிச்சை பெற்றார்.
மதிய நிகழ்ச்சியின் போது இந்த விபத்து நிகழ்ந்தது. அன்றைய மாலை நிகழ்ச்சியில் மோட்டார் பைக் கண்காட்சி இடம்பெறவில்லை, ஆனால் அது ரத்து செய்யப்படாது.
மூலம்- swissinfo


