11.5 C
New York
Monday, November 9, 2026

213 மில்லியன் பிராங்க் மோசடி சந்தேகம்! – சுவிட்சர்லாந்தின் கொரோனா பரிசோதனைக் கட்டணங்களில் முறைகேடா?

சுவிட்சர்லாந்தில் கொரோனா பெருந்தொற்று காலத்தில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளுக்கான கட்டணக் கணக்கீடுகளில் பெருமளவிலான முறைகேடுகள் இடம்பெற்றிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

கொரோனா பரிசோதனைகளுக்காக சுவிஸ் மத்திய அரசு சுமார் 213 மில்லியன் பிராங்குகளை அதிகமாகச் செலுத்தியிருக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

- Advertisement -

இந்த விவகாரத்தைத் தொடர்ந்து, சுவிட்சர்லாந்தின் சுகாதாரத்திற்கான மத்திய அலுவலகமான BAG (Bundesamt für Gesundheit), மேலதிக பரிசோதனைக் கட்டணப் பட்டியல்களை ஆய்வு செய்ய நடவடிக்கை எடுத்துள்ளது.

இதற்காகக் கணக்கீடுகள் மற்றும் முறைகேடுகளைக் கண்டறிவதில் நிபுணத்துவம் பெற்ற தனியார் நிறுவனமொன்றிடம் மேலதிகக் கட்டணப் பட்டியல்களைச் சரிபார்க்கும் பணி ஒப்படைக்கப்பட்டுள்ளது.

கொரோனா காலத்தில் அரசாங்கம் ஏற்றுக்கொண்ட பரிசோதனைக் கட்டணங்களில் எவ்வளவு தொகை தவறாகச் செலுத்தப்பட்டது, அதற்குப் பின்னால் மோசடிகள் இடம்பெற்றுள்ளனவா என்பதைக் கண்டறிவதே இந்த ஆய்வின் நோக்கமாகும்.

213 மில்லியன் பிராங்க் என்ற மிகப்பெரிய தொகை தொடர்பான இந்த விவகாரம் சுவிட்சர்லாந்தில் பொதுமக்களின் வரிப்பணம் எவ்வாறு பயன்படுத்தப்பட்டது என்ற கேள்வியையும் மீண்டும் எழுப்பியுள்ளது.

விசாரணையின் முடிவில் உண்மையான நிதி இழப்பு மற்றும் முறைகேடுகளின் அளவு தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related Articles

Latest Articles