2.1 C
New York
Thursday, February 12, 2026

பசுமை லிபரல் கட்சியின் இணை நிறுவுநர் வெரீனா டீனர் காலமானார்.

பசுமை லிபரல் கட்சியின் இணை நிறுவுநரான, வெரீனா டீனர் தனது 75வது வயதில் நேற்றுக் காலமானார்.

மிகவும் மதிப்புமிக்க,  எங்கள் நீண்டகால தோழர் காலமானதை நாங்கள் உங்களுக்குத் ஆழ்ந்த சோகத்துடனும் கவலையுடனும் தெரிவிக்கிறோம்.

நாங்கள் ஒரு நல்ல நண்பர், மதிப்புமிக்க நபர் மற்றும் ஒரு முன்மாதிரியை இழந்திருக்கிறோம் என பசுமை லிபரல் கட்சி நேற்று அறிவித்துள்ளது.

கட்சியின் நிறுவக உறுப்பினராக இருந்த வெரீனா டீனர்  1995 முதல் 2007 வரை சூரிச் கன்டோனின், சுகாதார இயக்குநராகவும் பணியாற்றினார்.

1987 ஆம் ஆண்டு முதல் 1998 ஆம் ஆண்டு வரை அவர் பசுமைக் கட்சியின் சார்பில், தேசிய சபை உறுப்பினராகவும் பதவி வகித்திருந்தார்.

ஆரம்பப் பள்ளி ஆசிரியரான இவர்,  பின்னர் சூழலியல் விரிவுரையாளராகவும் பணியாற்றியதுடன், 2004 இல் மார்ட்டின் பாம்லேவுடன் இணைந்து பசுமை லிபரல் கட்சியை நிறுவியிருந்தார்.

2007 இல், டீனர் மீண்டும் சுவிஸ் நாடாளுமன்றத்திற்கு போட்டியிட்டு, சுமார் 200,000 வாக்குகளுடன், அரச சபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பசுமை லிபரல் கட்சி  அரசியல்வாதி என்ற பெருமையையும் பெற்றுக் கொண்டவராவார்.

மூலம், – zueritoday

Related Articles

Latest Articles