0.8 C
New York
Monday, December 29, 2025

சூரிச்சில் துப்பாக்கிகளுடன் குவிக்கப்பட்ட பொலிசார் – என்ன நடந்தது?

சூரிச் Altstetten இல் பொலிசார் நேற்று ஒரு பாரிய தேடுதல்  நடவடிக்கையை மேற்கொண்டனர்.

இயந்திரத் துப்பாக்கிகளுடன் பொலிஸ் அதிகாரிகள் பெருமளவானோர்,  அந்த இடத்தில் காணப்பட்டனர்.

பல பொலிஸ் வாகனங்களும் அங்கு நிறுத்தப்பட்டிருந்தன.

ஒரு பாரிய நடவடிக்கை  இடம்பெற்றதை நகர பொலிசார் உறுதி செய்தனர்.

இந்த நடவடிக்கையின் போது பலர் கைது செய்யப்பட்டதை பொலிசார் உறுதிப்படுத்தியுள்ளனர்.

எனினும் அவர்கள் மேலதிக தகவல்களை வெளியிடவில்லை.

மூலம் – மூலம்.- 20min

Related Articles

Latest Articles