-3 C
New York
Friday, February 13, 2026

கத்தியைக் காட்டி மிரட்டி கடையில் கொள்ளை.

Neuhausen am Rheinfall இல், முகமூடி அணிந்த ஒருவர் நேற்று முன்தினம் மதியம்  சிறிய கடை ஒன்றுக்குள் புகுந்து கத்தியை காட்டி அச்சுறுத்தி பணத்தைக் கொள்ளையடித்துள்ளார்.

Poststrasse இல் உள்ள சிறிய கடைக்குள்  நுழைந்த அந்த நபர் அங்கிருந்த விற்பனையாளரான பெண்ணிடம் கத்தியைக் காட்டி மிரட்டி பணத்தை தருமாறு கேட்டதாக பொலிசார் தெரிவித்தனர்.

பெண் அந்த நபரிடம் சிறிது பணத்தை கொடுத்த போதும், அவர் தொடர்ந்து கத்தியை காட்டி மிரட்டினார்.

பின்னர் கடையில் இருந்து தப்பி ஓடியுள்ளார். அவரைத் தேடிப் பிடிக்கும் முயற்சிகள் வெற்றியளிக்கவில்லை என்று பொலிசார் தெரிவித்துள்ளனர்.

மூலம்-zueritoday

Related Articles

Latest Articles