5.3 C
New York
Tuesday, December 30, 2025

சூரிச் வானில் வால்நட்சத்திரம்- நாளை தென்படும்.

நாளை இரவு சூரிச் வானத்தில் ஒரு வால் நட்சத்திரத்தைப் பார்க்க முடியும் என்று வானியலாளர்கள் தெரிவித்துள்ளனர்.

C/2023 A3 என அழைக்கப்படும் Tsuchinshan Atlas  என்ற வால்வெள்ளி, தற்போது பூமியை நெருங்கி வருகிறது.

ஒக்டோபர் 11ஆம் திகதி முதல், ஜெர்மன் மொழி பேசும் நாடுகளில் இருந்து  இதனை வெறும் கண்ணால் பார்க்க முடியும்.

இன்று முதல் 14 ஆம் திகதிக்கு இடையில்  இந்த வால்வெள்ளியை தெளிவாக காணலாம்.

நாளை, வால்வெள்ளியின் சுற்றுப்பாதையானது பூமிக்கு மிக அருகில் உள்ள இடத்தை, அதாவது சுமார் 70 மில்லியன் கிலோமீட்டர் தொலைவை அடையும்.

இது பூமிக்கும் சூரியனுக்கும் இடையிலான தூரத்தில் கிட்டத்தட்ட பாதியாகும்.

மூலம்-zueritoday

Related Articles

Latest Articles