22.9 C
New York
Friday, June 20, 2025

சூரிச்சில் மீண்டும் சொக்லேட் டிராம்.

வெள்ளிக்கிழமை தொடங்கி, Confiserie Honold இன் சொக்லேட் டிராம் மீண்டும் சூரிச் நகரம் வழியாகச் செல்லும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

வெள்ளிக்கிழமை முதல் நவம்பர் 17 ஆம் திகதி வரை, Honold chocolate  டிராம் மீண்டும் சூரிச் நகரம் வழியாகச் செல்லும்.

இருப்பினும், 30 நிமிட பயணத்திற்கு,  பெரியவர்களுக்கான டிக்கெட்டின் விலை 45 பிராங்குகள், இரண்டு முதல் 12 வயது வரையிலான குழந்தைகளுக்கு 35 பிராங்குகள் கட்டணம் அறவிடப்படும்.

பத்து ஆண்டுகளுக்கு முன்பு, பெரியவர்களுக்கான டிக்கெட்டின் விலை ஐந்து பிராங்குகள் என்று அந்த நேரத்தில் டிராமில் பயணம் செய்த சூரிச்சைச் சேர்ந்த ஒரு பெண் தெரிவித்துள்ளார்.

2019 இல், பெரியவர்கள் 20 பிராங்குகள் மற்றும் 16 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் 10 பிராங்குகள் செலுத்தினர்.

Confisie Honold இப்போதைய கட்டண உயர்வை உறுதிப்படுத்துகிறது.

இந்த ஆண்டு முதல் புதிய விலை அமலுக்கு வந்துள்ளதாக பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

“இதற்குக் காரணம், நாங்கள் சொக்லேட் டிராமை முழுமையாக மறுவடிவமைப்பு செய்துள்ளோம்.

முன்னதாக, விருந்தினர்கள் டிராமில் ஏறி, நகரம் முழுவதும் பயணம் செய்து சொக்லேட் மாதிரிகளை சாப்பிடுவார்கள்.

இப்போது எல்லாம் கொஞ்சம் வித்தியாசமாக இருக்கிறது.

இடையில், நீங்கள் பல்வேறு சுவையான உணவுகளுடன்  பயணம் செய்யலாம் . அங்கு நீங்கள் ஏதாவது சுவைத்து கற்றுக்கொள்ளலாம். என்று தெரிவித்துள்ளார்.

இரண்டு வாரங்களுக்கு முன்னர் டிக்கெட் விற்பனை தொடங்கியது.

ஒரு வாரத்திற்குள் விற்றுத் தீர்ந்து விட்டது என்று தெரிவித்துள்ளார்.

மூலம்-  zueritoday

Related Articles

Latest Articles