19.8 C
New York
Thursday, September 11, 2025

Basel  கண்காட்சிக்கு ஒரு மில்லியன் பார்வையாளர்கள்.

Basel  இலையுதிர்கால கண்காட்சி, அல்லது ஹெர்ப்ஸ்ட்மெஸ்ஸியில் (autumn fair, or Herbstmesse) ஒரு மில்லியனுக்கும் அதிகமான பார்வையாளர்கள் வந்தனர் என்று, நகர அதிகாரிகள் தெரிவித்தனர்.

இது ஒரு சாதனை அளவு என்றும், நல்ல  வானிலையும்  அதற்கும்  காரணமாக   இருக்கலாம்  என்றும் அவர்கள் தெரிவித்தனர்.

சுவிட்சர்லாந்தின் மிகப்பெரிய மற்றும் பழமையான களியாட்ட சந்தை பதினைந்து நாட்களுக்கு முன்பு திறக்கப்பட்டது.

இந்த வருடத்தின் 554வது Basel  இலையுதிர்கால கண்காட்சியானது ஏழு இடங்களில் 470 நடமாடும் கடைகளைக் கொண்டிருந்தது.

பரபரப்பை விரும்புபவர்களுக்கான ஏரோனாட் எனப்படும், தரையில் இருந்து 85 மீட்டர் உயரத்தில் உள்ள உலகின் மிக உயரமான பறக்கும் நாற்காலி மற்றும் ஸ்புக் எனப்படும் பேய் ரோலர் கோஸ்டர் உள்ளிட்ட புதிய பல களியாட்ட வசதிகள் இதில் இடம்பெற்றிருந்தன.

மூலம் -swissinfo

Related Articles

Latest Articles