20.3 C
New York
Thursday, June 18, 2026

சுவிஸ் இராஜதந்திரிகள் இனி சாதாரண வகுப்பிலேயே பயணம்.

எதிர்காலத்தில்,  சுவிஸ் வெளியுறவு அமைச்சின் அனைத்து அதிகாரிகளும், நீண்ட தூரப் பயணங்களின் போது, விமானத்தில் சாதாரண வகுப்பிலேயே பயணம் செய்ய வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது 9 மணிநேரத்துக்கும் மேல் பயணம் செய்யும் வெளியுறவு  அமைச்சின் பணியாளர்கள்,  வணிக வகுப்பில் பயணம் செய்ய முடியும்.

இந்த புதிய விதிமுறை, தூதுவர்கள் மற்றும் அரசாங்க  செயலாளர்களுக்கும்  பொருந்தும்.

இதன் மூலம், வெளியுறவு அமைச்சு, வருடத்தில் 1.5 மில்லியன்  பிராங்கை சேமிக்க முடியும் என மதிப்பிட்டுள்ளது.

மூலம் – bluewin

Related Articles

Latest Articles