16.6 C
New York
Thursday, September 11, 2025

மலைக் கிராம மக்கள் வெளியேற்றப்பட்டனர்.

Graubünden  மலைக் கிராமமான Brienz இல் இருந்து மக்களை வெளியேற்றும் நடவடிக்கை நேற்று முன்னெடுக்கப்பட்டது.

கிராமத்தில் வசிக்கும் சுமார் 80 பேரில் பெரும்பாலும்  அனைவரும் அங்கிருந்து வெளியேற்றப்பட்டு  சுற்றியுள்ள பகுதியில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இங்குள்ள மக்களை வெளியேறுவதற்கு நாளை பிற்பகல் 1 மணி வரை காலக்கெடு விதிக்கப்பட்டுள்ளது.

இதற்குப் பின்னர், அங்கு அதிகாரிகளால் ஆய்வு நடத்தப்பட்டு யாரும் இல்லை என்பது உறுதிப்படுத்தப்படும்.

Brienz கிராமம் பாறை பனிச்சரிவினால் பாதிக்கப்படக் கூடிய அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளது.

சுமார் 1.2 மில்லியன் கன மீட்டர்  பாறைகள், பள்ளத்தாக்கில் நகர்ந்து மலை கிராமத்தின் மீது விழும் ஆபத்து உள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.

மூலம் – swissinfo

Related Articles

Latest Articles