இலங்கையில் புதிய அரசாங்கத்தின் அமைச்சரவை நாளை நியமிக்கப்படவுள்ளது.
புதிய அமைச்சரவை 23 பேர் கொண்டதாக இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி அனுரகுமார திசநாயக்கவினால் புதிய பிரதமர் மற்றும் அமைச்சர்கள் நியமிக்கப்பட்டு, பதவிப் பிரமாணம் செய்து கொள்ளவுள்ளனர்.
பிரதமராக மீண்டும் ஹரிணி அமரசூரிய நியமிக்கப்படவுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை பாதுகாப்பு அமைச்சராக மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர நியமிக்கப்படவுள்ளார்.
வெளிவிவகார அமைச்சராக விஜித ஹேரத் மீண்டும் நியமிக்கப்படுவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
மாத்தறை மாவட்டத்தில் இருந்து தெரிவு செய்யப்பட்ட தமிழ் நாடாளுமன்ற உறுப்பினரான சரோஜா சாவித்ரி போல்ராஜ், அமைச்சராக நியமிக்கப்படுவார் என்றும் கூறப்பட்டுள்ளது.
அதேவேளை எதிர்வரும் 21ஆம் திகதி கூடவுள்ள நாடாளுமன்றத்தில் சபாநாயகராக தேசிய மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாளர் பிமல் ரத்நாயக்க தெரிவு செய்யப்படவுள்ளார்.
பிரதி சபாநாயகர் பதவியை சிறுபான்மையினங்களைச் சேர்ந்த ஒருவரை நியமிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.