36.1 C
New York
Monday, June 23, 2025

பெர்னின் முதல் பெண் மேயராகிறார் Marieke Kruit.

பெர்னின் முதல் பெண் மேயராக சமூக ஜனநாயகக் கட்சியின் Marieke Kruit பதவியேற்கவுள்ளார்.

தற்போதைய மேயர்  Alec von Graffenried (GFL) செவ்வாய்க்கிழமை இரண்டாவது வாக்கெடுப்புக்குச் செல்வதை தடுக்கும் வகையில், போட்டியில் இருந்து விலகினார்.

அத்துடன் Melanie Mettler (GLP) மேயர் பதவிக்கு போட்டியிடுவதில் இருந்து விலகியுள்ளார்.

நாளை இரண்டாவது சுற்று தேர்தலுக்கான வேட்புமனுக்காலம்  முடிவடைந்தவுடன் Marieke Kruit இன் தெரிவு அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்படும்.

முதல் சுற்று வாக்கெடுப்பின் முடிவு தெளிவாக இருந்தது ,பெண் மேயருக்கான பெரும்பான்மை விருப்பத்தையும் வெளிப்படுத்தியது என்று மேயர்  Alec von Graffenried கூறினார்.

அவர் Kruit க்கு பதவியை ஒப்படைப்பதற்கு விரைவாக நடவடிக்கை எடுக்கவுள்ளார்.

அதேவேளை, அடுத்த நான்கு ஆண்டுகளுக்குஅவர் நகர அரசாங்கத்தின் உறுப்பினராக தொடர்ந்து ஈடுபடுவார்.

முதல் சுற்று வாக்கெடுப்பில் 46.5 சதவீத வாக்குகள் வித்தியாசத்தில் Marieke Kruit வெற்றி பெற்றார்.

Alec von Graffenried  இற்கு 26.4 சதவீத வாக்குகள் கிடைத்தன.

புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட Melanie Mettler 17.8 சதவீதம் வாக்குகளைப் பெற்றார்.

மூலம்- watson.ch

Related Articles

Latest Articles