Basel கன்டோனில், Greifengasse இல் உள்ள Manor வணிகவளாகத்தில் நேற்றுமாலை பெருமளவு பொலிசார் சுற்றிவளைப்பு நடவடிக்கை ஒன்றை மேற்கொண்டனர்.
நடவடிக்கை இடம்பெற்றதை உறுதிப்படுத்திய பொலிசார், விபரங்கள் எதையும் தெரிவிக்கவில்லை.
- Advertisement -

Manor இன்அனைத்து நுழைவாயில்களையும் சுற்றி வளைத்த பொலிசார், ஆயுதங்களுடன் கடைக்குள் நுழைந்தனர்.
எவரும் உள்ளே வரவோ வெளியே செல்லவோ அனுமதிக்கப்படவில்லை.
இரண்டு பெண்களை அச்சுறுத்திய ஒரு நபர் Manor இற்குள் நுழைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவரிடம் கத்தி இருந்ததை பார்த்ததாக சிலர் தெரிவித்துள்ளனர்.


