-2.2 C
New York
Wednesday, December 31, 2025

தபால் பேருந்து விபத்து- 10 பேர் காயம்.

Aargau கன்டோனில் உள்ள Koblenz இல் தபால் பேருந்து விபத்துக்குள்ளானதில் 10  பேர்காயம் அடைந்துள்ளனர்.

நேற்று பிற்பகல் 1.30 மணியளவில் கார் ஒன்றும் தபால் பேருந்தும் மோதி விபத்து ஏற்பட்டது.

 Aare bridge பகுதியில், இடம்பெற்ற இந்த விபத்தில் தபால் பேருந்து கவிழ்ந்து வீதியோரத்தில் அந்தரத்தில் காணப்பட்டது.

அதில் பயணம் செய்த 4 சிறுவர்கள் உள்ளிட்ட 8 பேர் காயம் அடைந்தனர். சாரதி காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.

கார் சாரதியும் கடுமையான காயங்களுடன் மருத்துமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

மூலம்- Bluewin

Related Articles

Latest Articles