2025 ஏப்ரல் 2ஆம் திகதி முதல், ஐரோப்பிய ஒன்றியத்தை சேர்ந்தவர்கள், மற்றும் சுவிஸ் பிரஜைகள் இங்கிலாந்தில் நுழைவதற்கு, இலத்திரனியல் பயண அங்கீகாரத்தைப் (ETA) பெற வேண்டும்.
ஐரோப்பிய ஒன்றியத்தை சாராத குடிமக்களுக்கு, இந்த கட்டுப்பாடு, 2025 ஜனவரி 8முதல் நடைமுறைக்கு வரும்.
ETA அறிமுகமானது, 2025 ஆம் ஆண்டிற்குள் தனது எல்லைகளை முழுமையாக டிஜிட்டல் மயமாக்கும் இங்கிலாந்தின் திட்டங்களின் ஒரு பகுதியாகும்.
புதிய அமைப்பு குடியேற்றம் பற்றிய துல்லியமான தகவல்களை அரசாங்கத்திற்கு வழங்கும்.
எல்லைக் கட்டுப்பாடுகளை மேம்படுத்தி இங்கிலாந்தை இன்னும் பாதுகாப்பானதாக மாற்றும்.
ETAக்கான விண்ணப்பங்களை 2025 மார்ச் 5, முதல் சமர்ப்பிக்கலாம்.