16.6 C
New York
Thursday, September 11, 2025

ஏடிஎம் மையங்களில் கொள்ளைக்கு திட்டமிட்டவர்கள் மீது வழக்கு.

வெடிபொருள் குற்றங்கள் தொடர்பாக,  ஐந்து பேருக்கு எதிராக சுவிட்சர்லாந்தின் சட்டமா அதிபர் அலுவலகம் பெடரல் கிரிமினல் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டியுள்ளது.

இவர்கள் சுவிட்சர்லாந்தில் உள்ள ஏடிஎம் மையங்களை தகர்த்து கொள்ளையடிக்க திட்டமிட்டிருந்தனர்.

குற்றம் சாட்டப்பட்டவர்களில் நான்கு பேர் 2023 ஜூலையில் ஸ்ட்ரெங்கல்பாக் பகுதியில் ஒரு பொலிஸ் நடவடிக்கையின் போது,  வீடு ஒன்றினுள் வைத்து  கைது செய்யப்பட்டனர்.

பொலிசார் அங்கு வெடிமருந்துகளைக் கண்டறிந்ததும், கூடுதல் படைகள் வரவழைக்கப்பட்டன . சுற்றியுள்ள கட்டடங்களில் இருந்தவர்கள் வெளியேற்றப்பட்டனர்.

அதனால் 40 பேர் இரவு முழுவதும் உடற்பயிற்சி கூடத்தில் கழிக்க வேண்டியிருந்தது.

27 வயதான ஸ்பானியர், 23 வயதான டச்சு நாட்டவர், 32 வயதான டச்சு-துருக்கிய இரட்டை குடியுரிமை மற்றும் 25-கொசோவா நாட்டவர்  ஆகியோர் மீது சட்டமா அதிபர் அலுவலகம் நேற்று வழக்குப் பதிவு செய்துள்ளது.

விசாரணையின் போது,​​ஐந்தாவது சந்தேக நபரும் அடையாளம் காணப்பட்டதுடன், அவரைக் கைது செய்வதற்கான சர்வதேச எச்சரிக்கையும் விடுக்கப்பட்டது.

அவர் 30 வயதான அல்பேனியர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐந்து குற்றவாளிகளும் தற்போது முன்கூட்டியே தண்டனை அனுபவித்து வருகின்றனர்.

மூலம்- swissinfo

Related Articles

Latest Articles