23 C
New York
Thursday, August 20, 2026

நெதர்லாந்தில் பாரிய வெடிப்பு- தகர்ந்து போன அடுக்குமாடிகள்.

நெதர்லாந்தின் ஹேக் நகரில் பாரிய குண்டுவெடிப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது.

உள்ளூர் நேரப்படி 6.15 மணியளவில் அடுக்குமாடிக் குடியிருப்புப் பகுதியில் இந்த வெடிப்பு நிகழ்ந்துள்ளது.

அதில் 3 மாடிகளைக் கொண்ட 5 அடுக்குமாடிக் குடியிருப்புத் தொகுதிகள் முற்றாக அழிந்து போயிருக்கின்றன.

இரண்டு பேர் உயிரிழந்திருப்பதாகவும் 4 பேர் காயமடைந்தனர் என்றும் உறுதி செய்யப்பட்டுள்ளது.

சம்பவ நேரம் அங்கு 20இற்கும் அதிகமானோர் இருந்தனர் என்றும் பலர் காணாமல் போயுள்ளனர் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது,

எப்படி இந்த வெடிப்பு நிகழ்ந்தது என விரிவான தகவல்கள் வெளியாகவில்லை.

மீட்புப்பணிகள் இடம்பெற்று வருகின்றன.

Related Articles

Latest Articles