9 C
New York
Monday, March 30, 2026

Coop விநியோக மையத்தில் அமோனியா வாயு கசிவு.

Gossau  இல் உள்ள Coop விநியோக மையத்தில் உள்ள தொழில்நுட்ப அறையில் இருந்த குளிரூட்டும் அமைப்பிலிருந்து அமோனியா  வாயு கசிவு ஏற்பட்டுள்ளது.

வெள்ளிக்கிழமை இரவு, இடம்பெற்ற இந்தச் சம்பவத்தை அடுத்து தீயணைப்பு துறையினர் 50 பணியாளர்களை வெளியேற்றினர்.

Gossau மற்றும் St. Gallen இல் இருந்து தீயணைப்பு மற்றும் இரசாயன மீட்பு சேவையினர் வாயுக் கசிவை தடுக்க நடவடிக்கை எடுத்தனர்.

இதனால் பொது மக்களுக்கு எந்த ஆபத்தும் ஏற்படவில்லை என்று St. Gallen பொலிசார் தெரிவித்தனர்.

பல்பொருள் அங்காடிகளின் அடிப்படை விநியோகம் உறுதி செய்யப்பட்டுள்ளதாக Coop அறிவித்துள்ளது.

மூலம் – watson.ch

Related Articles

Latest Articles