Buchs இல் கார் மீது ரயில் மோதிய விபத்தில், காரில் இருந்த மூதாட்டியும் சிறுவனும் மயிரிழையில் உயிர்தப்பியுள்ளனர்.
நேற்று மாலை 6.45 மணியளவில் Weidweg இல் ரயில்வே கடவையில் சிறிய கார் ஒன்று திடீரென பழுதாகி நின்றது. அப்போது ரயில் கடவை மூடப்பட்டது.
உடனடியாக காரை ஓட்டிச் சென்ற 83 வயது மூதாட்டியும், 10 வயது சிறுவனும்,கீழே இறங்கிய சற்று நேரத்தில் அந்த வழியாக வந்த ரயில் கார் மீது மோதி பல நூறு மீற்றர்கள் இழுத்துச் சென்றது.
எனினும் எவருக்கும் காயம் ஏற்படவில்லை.
மூலம்- 20min.