17.5 C
New York
Wednesday, September 10, 2025

பெற்றோல் நிலையத்தில் துப்பாக்கியை காட்டி கொள்ளையடித்தவர் கைது.

Zurich-Wollishofen இல் பெற்றோல் நிலையத்தில் துப்பாக்கியைக் காட்டி அச்சுறுத்தி கொள்ளையடித்தவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

நேற்றிரவு 10 மணியளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றது.

கைத்துப்பாக்கியுடன் நுழைந்த ஒருவர் பணியாளரை அச்சுறுத்தி பெற்றோல் நிலையத்தில் இருந்த கடையில் நூற்றுக்கணக்கான பிராங்கை கொள்ளையடித்துக் கொண்டு தப்பிச் சென்றார்.

இதையடுத்து பொலிசார் தீவிர தேடுதலில் இறங்கினர்.

சற்று நேரத்தில் 17 வயதுடைய சுவிஸ் நபரான கொள்ளையர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மூலம்- 20min.

Related Articles

Latest Articles