20.1 C
New York
Wednesday, September 10, 2025

சுவிஸ் இராணுவ மற்றும் புலனாய்வு தலைவர்கள் பதவி விலகுகின்றனர்.

சுவிஸ் இராணுவத் தளபதி மற்றும் புலனாய்வுச் சேவைகள் தலைவர் ஆகியோர் பதவிகளில் இருந்து விலகியுள்ளனர் என ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆயுதப்படைகளின் தலைவரான Thomas Süssli தனது பதவி விலகல் கடிதத்தை  வழங்கியிருப்பதாக  ஊடகம் ஒன்றில் கட்டுரை வெளியாகியிருப்பது குறித்து பாதுகாப்பு அமைச்சும் இராணுவமும் ஆரம்பத்தில் கருத்து தெரிவிக்க மறுத்து விட்டன.

அதேவேளை Christian Dussey மத்திய புலனாய்வு சேவையின் (FIS) தலைவர் பதவியில் இருந்து விலகியுள்ளதாக செய்துள்ளதாக ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.

சுவிஸ் பொது ஒளிபரப்பாளரான SRF,  பெடரல் கவுன்சிலுக்கு நெருக்கமான வட்டாரங்களில் இருந்து இந்த இரட்டை பதவி விலகல் குறித்து அறிந்துள்ளது.

அதன்படி, இராணுவத் தளபதி இந்த ஆண்டு இறுதி வரை தனது பதவியில் நீடிப்பார்.

அதே நேரத்தில் புலனாய்வு சேவைகள் தலைவர் 2026 மார்ச் இறுதி வரை பதவியில் இருப்பார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2020 இல் ஆயுதப்படை சேவைகளின் தலைவராக நியமிக்கப்பட்ட Thomas Süssli   தோல்வியுற்ற கொள்முதல் திட்டங்கள் குறித்து இராணுவம் மீது தீவிரமான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டதால், சில மாதங்களாக கடினமான சூழ்நிலையை சந்தித்துள்ளார்.

மூலம்- Swissinfo

Related Articles

Latest Articles