ஜெனீவா பார்சல் குண்டு வெடிப்புகள் தொடர்பாக, இரண்டு சகோதரர்கள் மீது முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளை நிறுத்த சுவிட்சர்லாந்து சட்டமா அதிபர் அலுவலகம் தீர்மானித்துள்ளது.
ஓகஸ்ட் மற்றும் நவம்பர் மாதங்களில் St-Jean மற்றும் Grange-Canal இல் இரண்டு பார்சல் குண்டு வெடிப்பு சம்பவங்கள் இடம்பெற்றதை தொடர்ந்து அவர்கள் சந்தேகிக்கப்பட்டு தற்காலிகமாக காவலில் வைக்கப்பட்டனர்.
இருவரின் வழக்கறிஞர்களும், இதனை உறுதிப்படுத்தியுள்ளனர்.
எனது கட்சிக்காரர் ஏன் கைது செய்யப்பட்டு பின்னர் காவலில் வைக்கப்பட்டார் என்பது எனக்கு இன்னும் புரியவில்லை.
சுவிட்சர்லாந்தின் சட்டமா அதிபர் அலுவலகமும் நிதி அடிப்படையில் தனது தவறுகளை ஒப்புக்கொள்ளும் என்று நம்புகிறேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
மூலம்- bluewin