Schramberg, Baden-Württemberg இல் காணாமல்போனதாக முறையிடப்பட்ட பெண் அவரது வீட்டில் நிறுத்தப்பட்டிருந்த காரின் மேல் பகுதி பெட்டியில் சடலமாக மீட்கப்பட்டதை அடுத்து, அவரது மகன் கைது செய்யப்பட்டுள்ளார்.
54 வயதுடைய மகன் காணாமல் போனதாக அறிவிக்கப்பட்ட நிலையில் அதுகுறித்து விசாரிக்கச் சென்ற பொலிசார், வீட்டின் அடித்தளத்தில் சடலத்தை கண்டுபிடித்தனர்.
அங்கு நிறுத்தப்பட்டிருந்த காரின் மேல் பகுதியில் பொருத்தப்பட்டிருந்த பொதிகள் வைக்கும் பெட்டியில் அந்தச் சடலம் கைப்பற்றப்பட்டது.
குறித்த பெண் மழுங்கிய பொருளினால் தாக்கப்பட்டு இரத்தப் போக்கு ஏற்பட்டு உயிரிழந்துள்ளார் என பிரேம பரிசோதனையில் தெரியவந்துள்ளது.
குறித்த பெண்ணின் மகனே அவரை கொலை செய்திருக்கலாம் என பொலிசார் சந்தேகிக்கின்றனர்.
சம்பவ இடத்திலேயே 20 வயதுடைய மகன் கைது செய்யப்பட்டுள்ளார்.
மூலம்- bluewin