-0.9 C
New York
Thursday, January 1, 2026

சுவிசிலும் காட்டுத் தீ – 4200 சதுர மீற்றர் காடுகள் நாசம்.

Zizers நகராட்சியில் உள்ள Auenwald இல் காட்டுத் தீயினால் பெருமளவு நிலப்பரப்பு நாசமாகியுள்ளது.

நேற்று பிற்பகல் 4.30 மணியளவில் காட்டுத் தீ தொடர்பான தீயணைப்பு பிரிவினருக்கு தகவல் கிடைத்தது.

உடனடியாக அவர்கள் விரைந்து சென்று தீயணைப்பு பணிகளில் ஈடுபட்டனர்.

நான்கு மணி நேரப் போராட்டத்தின் பின்னர், ட்ரோன்கள் உதவியுடன் அவர்கள் தீயை முற்றாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.

இந்தச் சம்பவத்தில் சுமார் 4200 சதுர மீற்றர் பரப்பளவிலான காட்டுப் பகுதி தீயில் கருகி நாசமாகியுள்ளது.

Graubünden கன்டோனல் பொலிசார் விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.

Related Articles

Latest Articles