30.1 C
New York
Thursday, August 20, 2026

விமான நிலைய பாதையில் ட்ராம் போக்குவரத்து பாதிப்பு.

Opfikon இல் விநியோக வான் ஒன்றுடன் ட்ராம் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.

நேற்று 10.15 மணியளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இந்த விபத்தில் விநியோக வான் பலத்த சேதம் அடைந்துள்ளதுடன் அதன் சாரதியும் காயம் அடைந்துள்ளார்.

இந்த விபத்தினால் 10 மற்றும் 12ஆம் இலக்கப் பாதைகளில், சூரிச் விமான நிலையம், Cargo மற்றும் Glattpark இடையிலான ட்ராம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

எனினும் சுமார் ஒரு மணிநேரத்திற்குப் பின்னர் சேவைகள் சீரடைந்தன.

மூலம்- 20min

Related Articles

Latest Articles