-1.1 C
New York
Friday, February 13, 2026

உலக கோப்பை போட்டி அரங்கில் நுழைய முயன்ற ஆர்ப்பாட்டக்காரர்கள்.

லௌசானில் நேற்றுமாலை நடைபெற்ற 19 வயதுக்கு உட்பட்டோருக்கான கூடைப் பந்து உலகக் கோப்பை போட்டியின் போது, பலஸ்தீன ஆதரவு ஆர்ப்பாட்டக்காரர்கள் நடத்திய போராட்டத்தினால் குழப்ப நிலை ஏற்பட்டது.

இஸ்ரேல் சுவிட்சர்லாந்து அணிகள் மோதியஇந்த போட்டி நடந்த அரங்கினுள், சுமார் 150 பலஸ்தீன ஆதரவு ஆர்வலர்கள் அத்துமீறி நுழைய முயன்றனர்.

அவர்களைக் கலைக்க பொலிசார் மிளகு ஸ்பிரேயை பயன்படுத்தினர்.

மாலை 6:30 மணி முதல் ஆர்ப்பாட்டக்காரர்கள் வௌட் அரங்கின் முன் கூடியிருந்தனர்.

போட்டி தொடங்குவதற்கு முன்னர், அவர்கள் பாதுகாப்புத் தடைகளைத் உடைத்துக் கொண்டு நுழைய முயன்றனர்.

ஆர்ப்பாட்டக்காரர்கள் பல முறை மேற்கொண்ட முயற்சிகளை தடுக்க பொலிசார் மிளகு ஸ்பிரேயை பயன்படுத்தினர்.

போட்டிக்கு வந்தவர்கள் அரங்கிற்குள் நுழைந்தபோது அவர்களை எதிர்த்து கோசமிட்டனர்.

19 வயதுக்குட்பட்ட கூடைப்பந்து உலக சாம்பியன்ஷிப்பிலிருந்தும் பொதுவாக அனைத்து விளையாட்டு நிகழ்வுகளிலிருந்தும் இஸ்ரேலை விலக்க வேண்டும் என்று அவர்கள் அழைப்பு விடுத்தனர்.

மூலம்- swissinfo

Related Articles

Latest Articles