17.5 C
New York
Sunday, September 27, 2026

நள்ளிரவில் துப்பாக்கிச் சூடு – காயத்துடன் ஒருவர் கைது.

Givisiez இல்  இன்று அதிகாலை அடுக்குமாடி கட்டடத்தின் முன் வாசலில் துப்பாக்கிச் சூடு  இடம்பெற்றுள்ளது.

அடுக்குமாடி கட்டடத்தின் முன் கதவில் 67 வயது நபர் ஒருவர் பலமுறை துப்பாக்கியால் சுட்டுள்ளார்.

- Advertisement -

இதையடுத்து இன்று அதிகாலை 12.30 மணியளவில் அதிரடிப்படையினர் உள்ளிட்ட பெருமளவு பொலிசார் குவிக்கப்பட்டனர்.

அவர்கள், துப்பாக்கிச் சூடு நடத்தியவரை, துப்பாக்கியுடன் கைது செய்தனர்.

அவர் தன்னைத்தானே காயப்படுத்திக் கொண்டதாக கூறப்படுகிறது.

கைது செய்யப்பட்டவர் பொலிஸ் பாதுகாப்புடன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.

மூலம் – Bluewin

Related Articles

Latest Articles