லுகானோவில் நடந்த இறுதிப் போட்டியில் மூன்று சிறந்த சுவிஸ் சீஸ்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன.
சர்வதேச நடுவர் மன்றத்திற்கு சமர்ப்பிக்கப்பட்ட 1,100 க்கும் மேற்பட்ட உள்ளீடுகளில் இருந்து இந்த மூன்று சீஸ்களும் தெரிவு செய்யப்பட்டுள்ளன.
32 வகைகளில் 1,127 சீஸ்கள் இந்தப் போட்டியின் போது மதிப்பிடப்பட்டன.
ஒவ்வொரு வகையிலும் சிறந்த சீஸ் முதலில் தேர்ந்தெடுக்கப்பட்டது.
அடுத்து, அவற்றில்இருந்து கூடுதல் கடினமான மற்றும் கடினமான, அரை-கடினமான, மென்மையான மற்றும் புதிய என மூன்று சுவிஸ் சீஸ் சம்பியன்கள் தேர்ந்தெடுக்கப்பட்டன.
சுவிட்சர்லாந்தின் பிரெஞ்சு மொழி பேசும் பகுதியிலிருந்து இரண்டு சீஸ்கள் வெற்றி பெற்றன. சுவிஸ்-ஜெர்மன் சீஸ் பால் பண்ணையான லாந்தனில் இருந்து மூன்றாவது வெற்றியாளர் தெரிவு செய்யப்பட்டார்.
சீஸ் மற்றும் சமையற்கலை வல்லுநர்கள், பத்திரிகையாளர்கள் மற்றும் பலநாடுகளைச் சேர்ந்த நுகர்வோர் என 150க்கும் மேற்பட்டவர்கள் அடங்கிய குழுவால் அவர்கள் தெரிவு செய்யப்பட்டனர்.
மூலம்- Swissinfo