11 C
New York
Wednesday, April 22, 2026

பல கிலோ மீற்றர் நீளத்துக்கு வரிசை கட்டி நின்ற வாகனங்கள்.

Gotthard சுரங்கப்பாதையில் இடம்பெற்ற விபத்து ஒன்றை அடுத்து, நேற்று பிற்பகலில் மூடப்பட்டது.

சுரங்கப்பாதையின் இரண்டு பக்கங்களிலும், போக்குவரத்து தடுக்கப்பட்டதால் நீண்ட தூரத்திற்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றன.

Quinto மற்றும் Gotthard சுரங்கப்பாதை இடையே 3 கிலோ மீற்றர் நீளத்திற்கும், Wassen மற்றும் Göschenen இடையே 4 கிலோ மீற்றர் நீளத்திற்கும் வாகனங்கள் காத்திருந்தன

சுமார் இரண்டு மணி நேரத்துக்குப் பிறகு பிற்பகல் 4.30 மணியளவில் சுரங்கப்பாதை மீண்டும் திறக்கப்பட்டது.

எனினும் போக்குவரத்து சீரடைவதற்கு பல மணிநேரங்கள் ஆனது.

மூலம் – 20min

Related Articles

Latest Articles