-0.3 C
New York
Tuesday, December 30, 2025

சூரிச்சில் அடுத்தடுத்து எரிபொருள் நிலைய கடைகளில் கொள்ளை.

சூரிச்சில் மாவட்டம் 12இல் Überlandstrasse இல் உள்ள Avia எரிபொருள் நிரப்பு நிலையத்தில், ஆயுதம் ஏந்திய மூன்று பேர் கத்தியைக் காட்டி அச்சுறுத்தி கொள்ளையடித்துள்ளனர்.

வியாழன் இரவு 8 மணியளவில், Avia எரிபொருள் நிரப்பு நிலைய கடைக்குள் நுழைந்த மூன்று பேர் அங்கு விற்பனையாளராகப் பணியாற்றும் பெண்ணை கத்தியை காட்டி அச்சுறுத்தியுள்ளனர்.

அந்தப் பெண், அவர்களிடம் இருந்து தப்பிச் சென்று, பின்கதவு வழியாக சென்று கதவை மூடியுள்ளார்.

இதனால் கொள்ளையர்கள், புகையிலைப் பொருட்கள் உள்ளிட்டவற்றை கொள்ளையடித்துக் கொண்டு தப்பிச் சென்றுள்ளனர்.

அதேவேளை, Migrol இல்  Winterthurerstrasse இல் உள்ள எரிபொருள் நிரப்பு நிலைய கடையில் புதன்கிழமை இரவு 8.30 மணியளவில் முகமூடி அணிந்த ஒருவர், கத்தியைக் காட்டி அச்சுறுத்தி கொள்ளையடித்துச் சென்றுள்ளார்.

மூலம் – 20min

Related Articles

Latest Articles