16.6 C
New York
Thursday, September 11, 2025

NZZ கட்டடத்தின் மீது பெயின்ற் தாக்குதலைத் நடத்திய 10 பேர் கைது.

அனுமதியின்றி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட, “Neue Zürcher Zeitung” (NZZ) கட்டடத்தின் மீது பெயின்ற் தாக்குதலைத் நடத்திய, பத்து பேரை சூரிச் நகர பொலிசார் கைது செய்தனர்.

நேற்று இரவு 10 மணியளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

சூரிச் நகர காவல்துறையினர் ரோந்துப் பணியில், ஈடுபட்டிருந்த போது, சூரிச் மாவட்டம் 1 இல் முகமூடி அணிந்த பலர், ஒரு பதாகையுடன் அனுமதி பெறப்படாத ஆர்ப்பாட்டத்தை நடத்துவதையும், NZZ கட்டடத்தின் மீது பெயின்ற் விசிறுவதையும் கண்டனர்.

கூடுதல் அவசரகால பணியாளர்களின் உதவியுடன், அந்த ஆர்ப்பாட்டம் கலைக்கப்பட்டதுடன், 19 தொடக்கம் 74 வரை வயதுடைய 10 சுவிஸ் குடிமக்கள் கைது செய்யப்பட்டனர்.

இந்த நடவடிக்கையின் போது, இறப்பர் தோட்டாக்கள் மற்றும் எரிச்சலூட்டும் பொருட்களும் பயன்படுத்தப்பட்டன.

.

Related Articles

Latest Articles