-0.5 C
New York
Tuesday, December 30, 2025

காலக்கெடு முடிந்தது – சீல் வைக்கப்பட்டது மலைக் கிராமம்.

கிழக்கு சுவிட்சர்லாந்தில் உள்ள Brienz/Brinzauls மலை கிராமத்தை விட்டு வெளியேறுவதற்கான காலக்கெடு இன்று மதியம் 1 மணியுடன் முடிவடைந்துள்ளது.

இதையடுத்து கிராமத்துக்குள் நுழைவதற்குத்  தடை விதிக்கப்பட்டுள்ளது.

மலையில் இருந்து 1.2 மில்லியன் கியூபெக் மீற்றர் பாறைகள் இந்தக் கிராமத்தின் மீது சரிந்து விழும் ஆபத்து ஏற்பட்டுள்ளது.

இதனால், கிராமத்தில் இருந்த 80 பேர் வெளியேற்றப்பட்டு வேறு இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இங்கிருந்த விலங்குகளும் வேறு இடங்களுக்கும் பண்ணைகளுக்கும் மாற்றப்பட்டுள்ளன.

500 ஆண்டுகள் பழமையான புனித கலிக்ஸ்டஸ் தேவாலயத்தில் இருந்து கோதிக் பலிபீடமும் அகற்றப்பட்டுள்ளது.

Brienz/Brinzauls ஐச் சுற்றியுள்ள ஆபத்து மண்டலத்திற்குள் நுழைவதற்கான தடை தீயணைப்புத் துறைக்கும் பொருந்தும்.

மூலம்- swissinfo

Related Articles

Latest Articles