16.6 C
New York
Thursday, September 11, 2025

திருட்டுக்களை தடுக்க 24 மணிநேர கண்காணிப்பு.

Graubünden  கன்டோனில் உள்ள  Brienz/Brinzauls என்ற மலைக் கிராமம் 24 மணிநேரமும் கண்காணிக்கப்பட்டு வருகிறது.

அருகில் உள்ள மலையில் இருந்து கற்பாறைகள் சரியும் ஆபத்து இருப்பதால் இந்தக் கிராமத்தில் உள்ள அனைவரும் வெளியேற்றப்பட்டுள்ளனர்.

நேற்று பிற்பகல் 1 மணிக்குப் பின்னர் இங்கு செல்வதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது.

வளர்ப்புப் பிராணிகளுடன் வீடுகளை விட்டு வெளியேறிய மக்கள் திரும்பிச் செல்வதற்கு பல மாதங்களாகும் எனக் கூறப்படுகிறது.

இந்த நிலையில் தங்களின் வீடுகளில் பொருட்கள் திருடப்பட்டு விடும் அபாயம் இருப்பதாக மக்கள் தெரிவித்துள்ளனர்.

இதனால் திருடர்களை தடுப்பதற்காக கிராமத்தை இலத்திரனியல் முறையில் கண்காணிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மூலம் – 20min

Related Articles

Latest Articles