நாடாளுமன்றத் தேர்தலில் இலங்கை தமிழரசு கட்சிக்கு கிடைத்த தேசியப் பட்டியல் ஆசனம், அந்தக் கட்சியின் பொதுச் செயலாளர் மருத்துவர் சத்தியலிங்கத்துக்கு வழங்கப்பட்டுள்ளது.
நடந்து முடிந்த தேர்தலில் அவர் வன்னி தேர்தல் மாவட்டத்தில் போட்டியிட்ட போதும் தெரிவு செய்யப்படவில்லை.
வவுனியாவில் நேற்று நடந்த கட்சியின் அரசியல் குழுக் கூட்டத்தில், தேசியப் பட்டியல் ஆசனத்தை மருத்துவர் சத்தியலிங்கத்துக்கு வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரனுக்கு இதனை வழங்க வேண்டும் என பலர் கோரிய போதும், சிறிதரன், குகதாசன், மாவை சேனாதிராசா ஆகியோர் அதனை எதிர்த்தனர்.
அதேவேளை மாவை சேனாதிராசாவும் கட்சியின் நிர்வாகச் செயலாளரும் இந்தப் பதவியைப் பெறுவதற்கு போட்டியிட்ட போதும், அவர்களின் விருப்பங்கள் நிராகரிக்கப்பட்டன.