சுவிட்சர்லாந்தில் பறவைக்காய்ச்சல் பரவும் ஆபத்து இருப்பதால், அவதானமாக இருக்குமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அண்மையில் உயிரிழந்த அன்னப்பறவை ஒன்றுக்கு பறவைக்காய்ச்சல் பாதிக்கப்பட்டிருந்தது உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து சுவிசில் பறவைக்காய்ச்சல் ஆபத்து அதிகரித்திருப்பதாக உணவு பாதுகாப்பு மற்றும் கால்நடை அலுவலகம் தெரிவித்துள்ளது.
ஐரோப்பாவில் அதிகளவிலான தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில், சுவிட்சர்லாந்தில் பறவை வைரஸ் மேலும் பரவும் அபாயம் கணிசமாக அதிகரித்துள்ளது என்றும் அந்த அலுவலகம் தெரிவித்துள்ளது.
சுவிட்சர்லாந்தில், முக்கியமான தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வளர்ப்புக் கோழிகள், மற்றும் காட்டுப் பறவைகள் ஆகியவற்றுக்கு இடையேயான தொடர்புகளைத் தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்த தொற்று சுவாச பாதை வழியாக ஏற்படுகிறது.
இறந்த அல்லது நோய்வாய்ப்பட்ட பறவைகளைத் தொடக் கூடாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மூலம்- 20min