இந்த ஆண்டுக்காக பிரபஞ்ச அழகியாக (மிஸ் யுனிவேர்ஸ்) டென்மார்க்கைச் சேர்ந்த, விக்டோரியா கிஜார் தெயில்விக் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
மெக்சிகோ சிட்டியில் நடந்த 73வது பிரபஞ்ச அழகிப் போட்டியில், மொத்தம் 127 போட்டியாளர்களில் இருந்து, 21 வயதான இவர் தேர்வு செய்யப்பட்டார்.
நிகரகுவாவைச் சேர்ந்த, முன்னாள் பிரபஞ்ச அழகி ஷெய்னிஸ் பலாசியோஸ், விக்டோரியா கிஜாருக்கு மகுடம் சூட்டினார்.
சுவிட்சர்லாந்தை நிட்வால்டனில் இருந்து லாரா பிர்ச்சர் இந்தப் போட்டியில் பங்கேற்றிருந்த போதும், தரவரிசைப் பட்டியலில் முதல் 30 இடங்களுக்குள் அவர் வரவில்லை.
இதுகுறித்து அவர் தனது ஏமாற்றத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
முன்னதாக, 18 முதல் 28 வயது வரையிலான பெண்கள் மட்டுமே பிரபஞ்ச அழகி போட்டியில் பங்கேற்க அனுமதிக்கப்பட்டனர்.
எனினும்இம்முறை இந்த வயது வரம்பு நீக்கப்பட்டுள்ளது.
மெக்சிகோவில் நடந்த இந்த போட்டியில், கமரூனில் பிறந்த 40 வயதுடைய, மூன்று குழந்தைகளுக்கு தாயாரான, பெண் ஒருவரும் இந்த போட்டியில் பங்கேற்றார்.
1952 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வரும் இந்தப் போட்டியில் அண்மைய ஆண்டுகளில் அதிகளவில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
ஒரு வருடத்திற்கு முன்னர் திருமணமான மற்றும் விவாகரத்து செய்த பெண்கள் மற்றும் தாய்மார்கள் முதல் முறையாக அனுமதிக்கப்பட்டனர்,
2018 இல் திருநங்கை ஒருவரும் சேர்த்துக் கொள்ளப்பட்டார்.
மூலம்- bluewin