-0.7 C
New York
Tuesday, December 30, 2025

கி.மு 3 ஆம் நூற்றாண்டு வெண்கல நாணயம் சுவிசில் முதல் முறையாக கண்டுபிடிப்பு.

கி.மு 3 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த ஒரு வெண்கல நாணயம் ரோமானிய நகரமான Augusta Raurica வில் அகழ்வாராய்ச்சியின் போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதுபோன்ற பழைமையான நாணயம் சுவிட்சர்லாந்தில் கண்டுபிடிக்கப்பட்டிருப்பது இதுவே முதல் முறையாகும்.

ஒருபுறம் மினெர்வாவின் தலையும் மறுபுறம் குதிரைத் தலையும் கொண்ட இந்த சிறிய நாணயம் இத்தாலியில் ரோமானியப் பேரரசின் மையப்பகுதியில் அச்சிடப்பட்டது.

இத்தாலியில் இதுபோன்ற நாணயங்கள் கண்டுபிடிக்கப்படுவது அசாதாரணமானது அல்ல, ஆனால் சுவிட்சர்லாந்தில் இது அரிதானதாகும்.

தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் தற்போதைய அகழ்வாராய்ச்சியின் போது வேறு சில அசாதாரண பொருட்களையும் கண்டுபிடித்துள்ளனர்.

அதில் முதலெழுத்துகள்  செதுக்கப்பட்ட கல் துண்டுகள் அடங்கும்.

இந்த கற்கள் முன்னர் ஆம்பிதியேட்டரின் முன் வரிசையில் பணக்கார குடிமக்களுக்கு ஒதுக்கப்பட்ட இருக்கைகளுக்கு பயன்படுத்தப்பட்டன.

 2023 ஏப்ரல் முதல் நடந்து வரும் அகழ்வாராய்ச்சிகளில்,  ஒரு டெரகோட்டா வீனஸ் சிலை மற்றும் ஒரு சிறிய வெண்கல சேவல் சிலை உட்பட பல முக்கியமான பொருட்கள் ஏற்கனவே, கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

இங்கு இன்றும் சில ஆச்சரியங்கள் வெளிச்சத்துக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மூலம். – swissinfo

Related Articles

Latest Articles