-0.5 C
New York
Tuesday, December 30, 2025

A4 இல் அடுத்தடுத்து மோதிய 7 வாகனங்கள்- போக்குவரத்து பாதிப்பு.

A4 நெடுஞ்சாலையில், Rütihof மற்றும் Lindencham சந்திப்பில் நேற்றுக்காலை பாரிய விபத்து ஏற்பட்டது.

நேற்றுக்காலை 10 மணியளவில் 6 கார்களும், ஒரு விநியோக வானும் அடுத்தடுத்து விபத்தில் சிக்கின.

இந்த விபத்தில் இரண்டு பேர் காயமடைந்தனர்.

இந்த விபத்தினால் வீதியின் மூன்று வழிகளும் தடைப்பட்டன.

Zug மற்றும் Lucerne திசையில் Rotkreuz நெடுஞ்சாலை நுழைவாயிலையும்  பொலிசார் மூடினர்.

அதேவேளை விபத்து நடந்த இடத்தைக் கடந்து சென்ற போது மொபைல் போன்களில் படம் எடுத்த பத்து சாரதிகளை Zug பொலிசார் கண்டுபிடித்தனர்.

இவர்களுக்கு எதிராக குற்றச்சாட்டு பதிவு செய்யப்படவுள்ளது.

மூலம்- 20min

Related Articles

Latest Articles