-0.5 C
New York
Tuesday, December 30, 2025

சுவிட்சர்லாந்தில்  கறுப்பு வெள்ளி வியாபாரம் மந்தம்.

சுவிட்சர்லாந்தில்  கறுப்பு வெள்ளி வியாபாரம் இந்த ஆண்டு மந்தமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டுகளில் சுவிட்சர்லாந்தின் மிகப்பெரிய ஷொப்பிங் நிகழ்வுகளில், ஒன்றாக கறுப்பு வெள்ளி வர்த்தகம் இருந்து வந்தது.

இருப்பினும், இந்த ஆண்டு, குறிப்பாக, கடைகளில், வியாபாரம் மந்தமாக உள்ளது.

அனைத்து கடைகளும் கறுப்பு வெள்ளி சலுகைகள் மற்றும் தள்ளுபடிகளை விளம்பரப்படுத்துகின்றன.

கறுப்பு வெள்ளியன்று ஒரு பெரிய ஷொப்பிங்கிற்கான எந்த அறிகுறியும் இன்னும் இல்லை.

குறிப்பாக, ஆடை மற்றும் காலணி கடைகள் வெறுமையாக இருந்தன. அங்கு ஒரு சில வாடிக்கையாளர்கள் மட்டுமே இருந்தனர்.

கவுண்டர்களில் இன்னும் வரிசைகளைக் காணமுடியவில்லை.

சூரிச்சின் Bahnhofstrasse இல் உள்ள Apple ஸ்டோர் மட்டும் மிகவும் பரபரப்பாக இருந்தது.

ஆனால் Apple கறுப்பு வெள்ளிக்கான சலுகைகளை அறிவித்திருக்கவில்லை.

மூலம்- Swissinfo

Related Articles

Latest Articles