24.8 C
New York
Thursday, June 26, 2025

இ-ஸ்கூட்டரில் சென்ற சிறுமி கார் மோதி படுகாயம்.

Aargau கன்டோனில்  Gebenstorf, என்ற இடத்தில் நேற்றுமாலை நடந்த விபத்து ஒன்றில் 14 வயது சிறுமி படுகாயமடைந்தார்.

விபத்தை ஏற்படுத்திய 93 வயது முதியவர் காயமின்றி தப்பியுள்ளார்.

இ- ஸ்கூட்டரில் பயணம் செய்த சிறுமி, பாதசாரிக் கடவையில் வீதியைக் கடக்க முயன்ற போது, முதியவர் ஓட்டிச் சென்ற கார், அவர் மீது மோதியுள்ளது.

இந்தச் சம்பவத்தில் படுகாயம் அடைந்த சிறுமி ஹெலிகொப்டர் மூலமாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.

மூலம் – 20min.

Related Articles

Latest Articles