16.6 C
New York
Wednesday, September 10, 2025

ஆயுதம் ஏந்திய நபர் ஜெனிவா பொலிசாரால் சுட்டுக்கொலை.

ஜெனீவாவின் பாக்விஸ் மாவட்டத்தில் நேற்றுப் பிற்பகல் ஆயுதம் ஏந்திய ஒருவரை பொலிசார் சுட்டுக் கொன்றனர்.

நேற்று பிற்பகல் 2 மணியளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

ஒரு நபர் நகர காவல்துறை வாகனத்தின் மீது நின்று கொண்டு ஒரு பெரிய கத்தியை காட்டி அச்சுறுத்திக் கொண்டிருந்தார்.

அவர் திடீரென தரையில் குதித்து ஓடியபோது, ​​ஒரு அதிகாரி நான்கு முறை துப்பாக்கிச் சூடு நடத்தினார்.

இதில், அந்த நபர் சம்பவ இடத்திலேயே இறந்தார். அந்தப் பகுதி சுற்றி வளைக்கப்பட்டது.

உயிரிழந்தவரின் அடையாளம் தற்போது தெரியவில்லை.

மூலம்- 20min

Related Articles

Latest Articles