17.4 C
New York
Saturday, October 10, 2026

ஜெனீவா உயர்நிலைப் பாடசாலைகளிலும் மொபைல் போன்களுக்கு தடை.

புதிய கல்வியாண்டின் தொடக்கத்திலிருந்து ஜெனீவாவின் உயர் நிலைப் பாடசாலைகளில் மொபைல் போன்கள் முற்றிலுமாக தடை செய்யப்படும்.

கற்றல் தரம், மாணவர்களின் மன ஆரோக்கியத்தைப் பாதுகாப்பது மற்றும் சமூக தொடர்புகளை ஊக்குவிப்பதை நோக்காக கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

- Advertisement -

தொடக்க மற்றும், பாடசாலைகளில் மொபைல் போன்கள் ஏற்கனவே தடை செய்யப்பட்டுள்ளன.

மொபைல் போன்களுக்கு முழுமையான தடையை விதிக்க முடிவு செய்துள்ளதாக பொதுக் கல்வித் துறை (DIP) கூறியுள்ளது.

இதனை மீறுவோரின் தொலைபேசி பறிமுதல் முதல் அரை நாள் பாடசாலையில் இருந்து விலக்குவது வரை தடைகள் உள்ளன.

இது தவிர, வகுப்பறை நடவடிக்கைகளுக்கு தனிப்பட்ட டிஜிட்டல் சாதனங்கள் இனி அனுமதிக்கப்படாது.

மூலம் -Swissinfo

Related Articles

Latest Articles