24.5 C
New York
Thursday, August 20, 2026

அதிகாலையில் பாரிய தீவிபத்து- அலேர்ட்ஸ்விஸ் எச்சரிக்கை.

ஸ்விஸ் கன்டோனில் இன்று  அதிகாலை 2:15 மணியளவில், ஏற்பட்ட தீவிபத்தை அடுத்து, அலேர்ட்ஸ்விஸ் மூலம் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

டக்கனில் உள்ள ஒரு தொழுவத்தில் தீ விபத்து ஏற்பட்டதாக  தெரிவிக்கப்பட்டுள்ளதுது.

அருகிலுள்ள குடியிருப்பு கட்டடத்திற்கு தீபரவாமல், தீயணைப்புத் துறையினரால் காப்பாற்றப்பட்டது.

யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்று பொலிசார் தெரிவித்த போதும்,  கொட்டகையில் இருந்த அனைத்து விலங்குகளும் மீட்கப்பட்டதா என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை.

கடுமையான புகை காணப்படுவதாக  அலேர்ட்ஸ்விஸ் செயலி மூலம் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஜன்னல்கள் மற்றும் கதவுகளை மூடுமாறும், குளிரூட்டிகளை  அணைக்குமாறும் குடியிருப்பாளர்கள் வலியுறுத்தப்பட்டுள்ளனர்.

மூலம்- 20min

Related Articles

Latest Articles