பலஸ்தீனத்தை அங்கீகரிப்பது சட்டப்பூர்வமாக சாத்தியம் என்பதை சுவிட்சர்லாந்து வெளியுறவு அமைச்சின் இரகசிய அறிக்கை கூறுகிறது.
இருப்பினும், அரசியல் அங்கீகாரத்திற்கு பெடரல் கவுன்சில் தடையாக உள்ளது. ஒரு விரிவான அமைதித் தீர்வுக்கு அது அழைப்பு விடுத்துள்ளது.
பலஸ்தீனத்தை அங்கீகரித்து அமெரிக்காவை கோபப்படுத்தவும் சுவிட்சர்லாந்து விரும்பவில்லை.
அமெரிக்காவின் வரிகளை குறைக்க பேச்சுக்கள் நடத்தப்படும் நிலையில் பலஸ்தீனத்தை அங்கீகரிப்பதால் ஏற்படக் கூடிய தாக்கங்கள் குறித்தும் சுவிட்சர்லாந்து தயக்கம் காட்டுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மூலம் – 20min.

