குர்சால் பெர்னில் மிஸ் யுனிவர்ஸ் சுவிட்சர்லாந்து 2025 தேர்வு நேற்று இடம்பெற்றது.
தாய்லாந்தில் நடைபெறும் உலகளாவிய மிஸ் யுனிவர்ஸ் போட்டியில் சுவிட்சர்லாந்தை யார் பிரதிநிதித்துவப்படுத்துவார்கள் என்பதற்கா இறுதிப் போட்டியாக இது அமைந்தது.
19 போட்டியாளர்கள் பங்கேற்ற இந்த போட்டியில், டிசினோ மாகாணத்தைச் சேர்ந்த நைமா அகோஸ்டா (20) வெற்றி பெற்று மிஸ் யுனிவர்ஸ் சுவிட்சர்லாந்து 2025 ஆக முடிசூட்டப்பட்டார்.
“அவரது நேர்த்தி, கவர்ச்சி மற்றும் உறுதியால் ஈர்க்கப்பட்டதாக என்று நடுவர் குழு தெரிவித்துள்ளது.
இப்போது அவர் தாய்லாந்தில் நடைபெறும் சர்வதேச மிஸ் யுனிவர்ஸ் போட்டியில் சுவிட்சர்லாந்தை பிரதிநிதித்துவப்படுத்துவார்.
மூலம்- 20min.

