பசென்ஹெய்டில் உள்ள விலெர்ஸ்ட்ராஸ்ஸில் இன்று காலை 7 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டதாக சென் காலன் கன்டோனல் பொலிசார் தெரிவித்துள்ளனர்.
அவசரகாலப் பணியாளர்கள் உடனடியாக விரைந்து சென்ற போது, கட்டிடத்திலிருந்து கடுமையான புகை வருவதைக் கண்டனர்,
சிற்றுண்டிச்சாலைக்கு மேலே உள்ள அடுக்குமாடி குடியிருப்புகளில் இருந்த அனைவரையும் அவர்கள் பாதுகாப்பாக வெளியேற்றினார்.
எட்டு மாதக் குழந்தை உட்பட மூன்று பேர் சிறிய காயமடைந்தனர். அவசர சேவைகள் அவர்களை மருத்துவமனைக்கு பரிசோதனைக்காக அழைத்துச் சென்றன.
டுக்குமாடி குடியிருப்புகள் தற்போது வசிக்கத் தகுதியற்றவை என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நகராட்சி தங்குமிடங்களை ஏற்பாடு செய்துள்ளது.
சுமார் 100 பேர் இந்த தீயணைப்பு மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டனர். சொத்து சேதம் இன்னும் கணக்கிட முடியவில்லை. இது பல லட்சம் சுவிஸ் பிராங்குகள் என மதிப்பிடப்பட்டுள்ளது.
விலெர்ஸ்ட்ராஸில் உள்ள வீதி பல மணி நேரம் மூடப்பட வேண்டியிருந்தது. தீ விபத்துக்கான காரணம் குறித்த விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
மூலம்- 20min.

