-3.4 C
New York
Thursday, January 1, 2026

சுவிட்சர்லாந்தில் 6 மாதங்களில் 164 சைபர் தாக்குதல்கள்.

சுவிட்சர்லாந்தில்  கடந்த 6 மாதங்களில் 164 சைபர் தாக்குதல்கள் பதிவு செய்யப்பட்டடுள்ளன.

முக்கியமான உள்கட்டமைப்பு மீதான சைபர் தாக்குதல்களைப் புகாரளிக்கும் பொறிமுறை அறிமுகப்படுத்தப்பட்டதிலிருந்து முதல் ஆறு மாதங்களில் இவை பதிவாகியுள்ளதாக சைபர் பாதுகாப்புக்கான கூட்டாட்சி அலுவலகம் (FCOS) வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த காலகட்டத்தில், 164 தாக்குதல்கள் பதிவு செய்யப்பட்டன.

அவற்றில்  DDoS தாக்குதல்கள் (18.1%), அதைத் தொடர்ந்து ஹேக்கிங் (16.1%), ransomware (12.4%), நற்சான்றிதழ் திருட்டு (11.4%), தரவு கசிவுகள் (9.8%) மற்றும் தீம்பொருள் (9.3%) என்பன ஆகியவை அடிக்கடி நிகழ்ந்தன.

நிதி (19%), ஐடி (8.7%) மற்றும் எரிசக்தி (7.6%) ஆகியவை மிகவும் பாதிக்கப்பட்ட துறைகளாகும்.

அதிகாரிகள், சுகாதார அமைப்பு, தொலைத்தொடர்பு நிறுவனங்கள், அஞ்சல் சேவைகள், போக்குவரத்துத் துறை, ஊடகம், உணவு வழங்கல் மற்றும் தொழில்நுட்பத் துறையிலிருந்து மேலும் முறைப்பாட்டு அறிக்கைகள் வந்தன.

ஏப்ரல் தொடக்கத்தில் இருந்து, முக்கியமான உள்கட்டமைப்புகள் 24 மணி நேரத்திற்குள் தாக்குதல்கள் குறித்து FOCS க்கு தெரிவிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளன.

ஒக்டோபர் மாதம் முதல், தகவல் பாதுகாப்பு தொடர்பான கூட்டாட்சிச் சட்டத்தின் கீழ் தடைகள் அமுலுக்கு வரும், இது புகாரளிக்கத் தவறியதற்காக 100,000 பிராங் வரை அபராதம் விதிக்கும்.

மூலம்- swissinfo.

Related Articles

Latest Articles