2 C
New York
Monday, December 29, 2025

ஆர்கோ கன்டோனில் காட்டுப் பகுதியில் காரில் சடலம்.

ப்ரெம்கார்டனுக்கும் புன்ஸெனுக்கும் இடையில் உள்ள, நகரத்திற்கு வெளியே உள்ள மரங்கள் நிறைந்த பகுதியில் விபத்துக்குள்ளான கார் ஒன்றில் இருந்து சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது.

நேற்றுக் காலை, 6:30 மணியளவில், அந்தப் பகுதியில் ஒரு வாகனம் இருப்பதாக ஆர்கோ பொலிசாருக்கு  தகவல் கிடைத்தது.

விபத்து நடந்த இடத்திற்கு சென்ற மீட்புப் பணியாளர்கள், காரில் இறந்த நிலையில் ஒருவர் கிடப்பதைக் கண்டுபிடித்தனர்.

ப்ரெம்கார்டனில் இருந்து புன்சென் நோக்கி காரை ஓட்டிச் சென்ற 24 வயதான சுவிஸ் நபரே உயிரிழந்தவர் என ஆர்கோ கன்டோனல் பொலிசார் கருதுகின்றனர்.

புன்சென் கிராமத்திற்குள் நுழைவதற்கு முன்பு அவர் ஏன் வளைவில் உள்ள பக்கத்து காட்டிற்குள் சென்றார் என்பது குறித்து விசாரணை நடத்தப்படுகிறது.

ஆங்கிலத்தில் – 20min

Related Articles

Latest Articles